ராகி பக்கோடா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 100 கிராம்

கடலை மாவு - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் சின்ன சின்னதாக நறுக்கவும்.

ராகி மாவுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நெய் விட்டு கலக்கவும். தேவைகேற்ப சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து சின்ன சின்ன பக்கோடாவாக போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: