ராகி பக்கோடா (1)
0
தேவையான பொருட்கள்:
ராகி - 1 கப்
முருங்கை கீரை - ஒரு கைப்பிடி
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி (தட்டியது அல்லது துருவியது) - 1 துண்டு
வெங்காயம் - 2
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாய் நறுக்கவும்.
எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பினையவும். பின் தேவைக்கு நீர் தெளித்து 1/2 மணி நேரம் ஊற விடவும்
பின் சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.