ரவை போண்டா (2)
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கிலோ
புளித்த இட்லி மாவு - 1 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்- 5
தயிர் - 2 மேசைக்கரண்டி
மல்லி கீரை - ஒரு பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
துருவிய கேரட் - 1 கப்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் ரவையில் இட்லி மாவு, தயிர், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.
இப்பொழுது மாவு புளித்து உப்பி வந்து இருக்கும், மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
பின்பு துருவிய கேரட் பெருங்காயத்தூள் ஆகியவற்றை எல்லாம் கலந்து வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள ரவை கலவையை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் வேக விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும், இப்படியே அனைத்து மாவையும் சுட்டு எடுக்கவும்.