ரவை போண்டா
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
முட்டை - 2
ஓமம் - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
பால் - 2 மேசைக்கரண்டி
துருவிய உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரவையில் பால், உப்பு, பேக்கிங் பவுடர், மிளகாய் தூள், ஓமம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி 15 நிமிடம் ஊற விடவும்.
பின் ரவை கலவையில் நறுக்கிய வெங்காயம், துருவிய உருளைக்கிழங்கு, மல்லி தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முட்டை அனைத்தையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஸ்பூனால் மாவை எடுத்து எண்ணெயில் விடவும். வெந்ததும் எடுத்து பரிமாறவும்.