ரவைபோண்டா
0
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் புளித்தது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 8
இஞ்ஞி - சின்ன துண்டு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையில் தயிர்,உப்பு,பெருங்காயம்,இஞ்ஞி,பச்சமிளகாய்,
கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை இவைகளை சின்ன
துண்டுகளாக வெட்டி போடவும்.
அரை மனிநேரம் ஊறவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்தவின்
இந்த மாவு கலவையை பெரிய நெல்லிகாய் எடுத்து எண்ணெயில் போடவும்.
இருபுறமும் திருப்பி போட்டு நன்றாக சிவக்க வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.