ரவா கட்லெட்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

கடலைமாவு - 1/2 கப்

காய்கறிகலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பட்டாணி) - 1/2 கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

மல்லித்தழை, புதினா (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சைசாறு - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனோடு நறுக்கிய காய்கறிகள், புதினா, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதிலேயே ரவையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ரவை கலவையுடன் சேர்க்கவும், தீயைக் குறைத்து வேக விடவும்.

கடலைமாவைக் கரைத்து ரவை கலவையில் விட்டு, கரம்மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து சுருளக் கிளறி இறக்கி ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.

ஆறியதும் துண்டுகளாக்கி எண்ணெயை காயவைத்து துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: