ரச வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி பருப்பு - 1 கப்

சின்னவெங்காயம் - 15

மிளகாய் வற்றல் - 3

சீரகம் - 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 3 இனுக்கு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ரசம் செய்ய:

மிளகாய் வற்றல் - 1

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா விதை - 1 தேக்கரண்டி

புளி - 1 கோலியளவு

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

மல்லிக்கீரை - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

மிளகாய் வற்றல் - 1

செய்முறை:

பட்டாணி பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிளகாய் வற்றல், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

சின்னவெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி பருப்பு கலவையுடன் கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

மிளகு, சீரகம், மிளகாய்வற்றல், தனியா ஆகியவற்றை பொடித்து புளிக்கரைசல், உப்பு, தண்ணீர், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து மல்லிக்கீரை தூவவும்.

பொரித்தெடுத்த வடைகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

அரைமணி நேரம் கழித்து வடை ரசத்தில் நன்றாக ஊறியதும் பரிமாறவும்.

குறிப்புகள்: