ரசவடை

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

காரசாரமான ரசம் - 6 கப்

கடலை பருப்பு - 1 கப்

பாசிப் பருப்பு - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி

மிளகாய் வற்றல் - 4 அல்லது 5

பச்சை மிளகாய் - 4 அல்லது 5

காயப் பொடி - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளையும், மிளகாய்களையும் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் தண்ணீரை வடிய வைத்து, உப்பு, காயம் சேர்த்து, தண்ணீர் விடாமல், நல்ல கரகரப்பாக அரைக்கவும்.

சேர்த்துத் தட்டும் அளவு அரைந்தால் போறும். இத்துடன் நறுக்கின கறிவேப்பிலை சேர்க்கவும்.

பிறகு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, கனமாக இல்லாமல், சற்றே மெல்லிய வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.

முக்கால் பதம் வெந்ததும் எடுத்து சற்று சூடான தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். அதிகப்படியான எண்ணை தண்ணீரில் இறங்கி விடும்.

பின்பு வடைகளை எடுத்து ரசத்தில் ஊற வைக்கவும். பரிமாறும்போது, அதன் மேல், பொரித்த அப்பளத்தை நொறுக்கி தூவி, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

குறிப்புகள்: