மொச்சை வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பெரிய மொச்சை - 1/2 கப்
வெங்காயம் - 1
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/4 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மொச்சையை 10 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
ஊறியதும் அதை மிக்சியில் அரைக்கவும்.
அரைத்த கலவையுடன், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்த மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.