மைதா போண்டா
0
தேவையான பொருட்கள்:
மைதா - 1 டம்ளர்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
தேங்காயை சிறு பல்லாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றை சிறுசிறு போண்டாக்களாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.