மைதா சீடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கிலோ

பொட்டுக்கடலை - 150 கிராம்

டால்டா (அல்லது) நெய் - 100 மில்லி

உப்பு தூள் - 5 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு சேர்த்து சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு பிசையவும்.

பிறகு ஒரு வெள்ளைத் துணியில் மாவை வைத்து மூட்டை போல் மூடவும்.

அடுப்பில் இட்லி பானையில் நீர் வைத்து, இட்லி தட்டின் மீது மாவு முட்டையை வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

பிறகு இறக்கி அகலமான பாத்திரத்தில் கொட்டி, டால்டா அல்லது நெய் சேர்த்து, பொட்டுக்கடலையை அதில் கொட்டி சிறிது சிறிதாக நீர் சேர்த்து சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு சமையல் எண்ணெய்யைக் காயவைத்து கலகலப்பாக வேகும் அளவு உருண்டைகளை அள்ளிப் போடவும்.

பொன்னிறமாக வந்ததும் அரித்து எடுத்து விடவும். மறுபடியும் அடுத்தெடுத்து இதே முறையில் எல்லா உருண்டைகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.

வழக்கமாய் அரிசி மாவில் செய்யும் சீடையானது வெடித்து எண்ணெய் நாலுபக்கமும் சிதறும் வாய்ப்பு உள்ளது. மைதா மாவில் செய்யும் சீடை வெடிக்காது.

இதே மாவில் சிறிது எண்ணெய்யைத் தொட்டு உருட்டி தட்டிப் போட்டு தட்டையாகவும் செய்யலாம். இரண்டுமே நீண்ட நாட்களுக்குக் கெடாது.

குறிப்புகள்: