மைதா காரச்சீடை
0
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
அரிசி மாவு - 1 1/2 ஆழாக்கு (300 கிராம்)
மிளகாய்ப்பொடி - 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரன்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டியில் வடித்து விட்டு ஒரு துணியில் 1 மணி நேரம் (அ) 2 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே உலர்த்த வேண்டும்.
தண்ணீரெல்லாம் காய்ந்து லேசான ஈரமாக இருக்குபோது மிஷினிலோ (அ) மிக்ஸியிலோ அரைத்து சலித்து கொள்ளவேண்டும்.
மிக்ஸியில் அரைப்பது என்றால் சலித்த பிறகு உள்ளதையும் போட்டு அரைத்து அதையும் சலித்து கொள்ளவும்.
மைதாவுடன், அரிசிமாவு, மிளகாய்ப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும்.