மைசூர் போண்டா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1/4 கிலோ
டால்டா - 50 கிராம்
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - 10
கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி, எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
டால்டாவை சூடு செய்து மாவில் நன்கு கலக்கவும்.
லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.