மைசூர் பஜ்ஜி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1

சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி துருவல் - 1/4 தேக்கரண்டி

சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

தேங்காய் பல் - 2 தேக்கரண்டி

புளித்த தயிர் - தேவையான அளவு

கொத்தமல்லி (பொடிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி மைதாமாவு, அரிசி மாவு, சோடா உப்பு, தேங்காய்பல், இஞ்சி துருவல் சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

தேவையெனில் மேலும் தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பஜ்ஜி இருப்பக்கமும் வெந்து சிவந்து வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: