மேகி நூடுல்ஸ் கட்லெட்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மேகி நூடுல்ஸ் - 1

உருளைக்கிழங்கு - 2

பட்டாணி - 1/4 கப்

வெங்காயம் - 1

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

பூண்டு - 2 பற்கள்

பச்சை மிளகாய் - 2

புதினா, மல்லித் தழை - கால் கைப்பிடி அளவு

சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள - 1/2 தேக்கரண்டி

முட்டை - 1

ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைக்கவும். பச்சை பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் பட்டாணி, தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸுடன் மசித்த உருளைக்கிழங்கு, வதக்கிய பட்டாணி கலவை மற்றும் பொடியாக நறுக்கிய புதினா மற்றும் மல்லித் தழை ஆகியவற்றைப் போட்டுக் கொள்ளவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகப் பிசையவும்.

முட்டையை நன்கு அடித்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். ப்ரெட் க்ரம்ஸை தட்டில் எடுத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள கலவையை கட்லெட்டுகளாகத் தட்டி முட்டையில் தோய்த்தெடுத்து, ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கட்லெட்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்:

எண்ணெயில் பொரிக்க விரும்பாதவர்கள் தோசை கல்லில் போட்டு சுட்டெடுக்கலாம்