மெது போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

டால்டா - 1 மேசைக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

முந்திரிப்பருப்பு - 6

ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு ஏற்ப

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டால்டா, உப்பு, ஆப்பசோடா மூன்றையும் ஒன்றாக குழைத்து கொள்ளுங்கள்.

அதனுடன் கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள்.

தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள்.

எண்ணெயை காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: