மெது பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்

டால்டா - 50 கிராம்

வெங்காயம் - 2

அரிசிமாவு - 1/2 கப்

பச்சைமிளகாய் - 4

மல்லித்தழை - சிறிது

சமையல் சோடா - 1 பின்ச்

சூடான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

டால்டா, சூடான எண்ணெய் உப்பு, சமையல் சோடா சேர்த்து கையால் நன்கு பிசையவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இவற்றையும் சேர்த்து, பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மாவு வகைகளை சேர்த்து கெட்டியாக பிசையவும்.

வாணலில் எண்ணெய் விட்டு சூடேறியதும், சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.

ஜல்லிக் கரண்டியால் கிளறிவிடவும். சிவந்ததும் எண்ணெய் வடிய விட்டு சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

டீயுடன் காப்பியுடன் சாப்பிட சுவையான பக்கோடா ரெடி.