மெதுவடை (1)

on on off off off 3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 200 கிராம்

பச்சைமிளகாய் - 6

இஞ்சி - ஒரு சிறுதுண்டு

மிளகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து கல் நீக்கி சுத்தம் செய்து கிரைண்டரில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

அரைக்கும் பொழுதே பெருங்காயம் கரைத்த நீர், உப்பு சேர்த்து கெட்டியாக சற்று நறநற வென்று அரைத்து எடுக்கவும்.

மாவில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, தட்டிய மிளகு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் நிறைய ஊற்றிக் காயும் பொழுது, இலையில் நீர் தடவி, ஓர் உருண்டை மாவை வைத்து தட்டி நடுவில் விரலைக் கொண்டு துளை செய்து சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறத்தில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: