முள்ளிக்கா சீடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 200 கிராம்

உருட்டு உளுத்தம் பருப்பு - 100 கிராம்

மிளகாய் வற்றல் - 4

பெருங்காயம் - குண்டு மணி அளவு

தேங்காய் துருவல் - 1/2 கப்

எண்ணெய் - 2 கப்

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி, உளுந்து இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமும், உளுந்து அரை மணி நேரமும் ஊற வேண்டும்.

ஊற வைத்த அரிசி, உளுந்தை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்துண்டு, மிளகாய் வற்றல் போட்டு அரைக்கவும். சிறிது கொரகொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை போட்டு கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிய நெல்லிக்காய் அளவாக கிள்ளி போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

இரண்டு நிமிடம் வைத்திருந்து வெந்ததும் எடுத்து விடவும். இதைப்போல் எல்லா மாவையும் செய்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: