முள்ளங்கி ரோல்
0
தேவையான பொருட்கள்:
துருவிய முள்ளங்கி -100 கிராம்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) -100 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
சோள மாவு - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துருவிய முள்ளங்கியுடன் கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
முள்ளங்கி சேர்த்துப் பிசைந்த மாவை சிறு அப்பளம் சைசில் தேய்த்து, அதனுள் சிறிது மசாலா கலவை வைத்து மூடி, காயும் எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.