முறுக்கு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கப்

உளுந்து - 1/4 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

வெள்ளை எள் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை கழுவி (ஊற வைக்கக்கூடாது) நன்றாக காய வைக்க வேண்டும்.

உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ந்த பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு மூன்றையும் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முறுக்குமாவு, வெண்ணெய், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பக்குவமாக பிசைந்து முறுக்கு உரலில் இட்டு பிழிந்து எடுத்து பொரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: