முறுக்கு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ

பொரிகடலை - 150 பொடித்தது

சோடா உப்பு (தேவையானால்) - சிறிது

சுமாரான தேங்காய் - 1

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதாமாவை ஸ்டீமரில் வைத்து அவித்துக்கொள்ளவும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

பின் மாவை கட்டிகளில்லாமல் உதிர்த்து அதில் பொரிகடலை மாவு,உப்பு ,தேங்காய் பால் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

தண்ணீர் சேர்க்கக்கூடாது பின்பு மாவை முறுக்கு பரலையில் போட்டு எண்ணெய்யை சூடாக்கி பொரித்து எடுக்கவும். ஒரு தடவையில் 4 அல்லது 5 முறுக்காக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: