முறுக்கு (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரிசிமாவு - 4 கப்
உளுந்துமாவு - 1/2 கப்
பொட்டுகடலைமாவு - 1/2கப்
வெண்ணய் - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
ஓமம் -1/2 தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசிமாவு,உளுந்துமாவு,பொட்டுகடலைமாவு,மிளகாய்தூள்,வெண்ணெய்,உப்பு,ஓமம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மாவைபிசைந்துகொள்ளவும்.
அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் முறுக்குபிழியும் அச்சில் மாவைபோட்டு எண்ணெயில் பிழிந்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.