முருங்கைப்பூ வடை
0
தேவையான பொருட்கள்:
முருங்கைப்பூ - 4 கப்
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பு வகைகளை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்துவைக்கவும்.
அத்துடன் முருங்கைப்பூவைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு முருங்கைப்பூவை கழுவி நைசாக நறுக்கி அதனுடன் போட்டு நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி அதில் போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுத்து பரிமாறவும்.