முப்பருப்பு வடை

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 100 கிராம்

உளுத்தம் பருப்பு - 50 கிராம்

துவரம் பருப்பு - 50 கிராம்

இஞ்சி - 2 அங்குல துண்டு

பூண்டு - 2 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை (பொடியாக நருக்கியது) - 3 மேசைக்கரண்டி

புதினா (பொடியாக நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை மற்றும் மூன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரரை வடிக்கவும்.

மிக்ஸியில் முதலில் சோம்பு, பட்டை, இஞ்சி பூண்டு, காய்ந்த மிளகாயை பொடிக்கவும். பிறகு அதில் கொர கொரப்பாக மிக்ஸியில் வைப்பரில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அரைத்த வடை மாவில் உப்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, பச்சை மிளகாயை நல்ல பைனாக சாப் செய்து வடை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

எண்ணெயை காய வைத்து ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: