முந்திரிப் பருப்பு பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 டம்ளர்
அரிசி மாவு - 1/4 டம்ளர்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
டால்டா - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
முந்திரி - 50 கிராம்
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முந்திரிப் பருப்பை லேசாக இரண்டாக பிளந்து வறுத்து கொள்ள வேண்டும்.
உப்பு, சோடா உப்பு, கடலை மாவை, மிளகாய் தூள் ஒன்றாக கலக்கி அதில் டால்டாவை சூடுப்படுத்தி ஊற்றி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்து கெட்டியாக பிசறி கொள்ளவும்.
ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.