முட்டை போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை (வேகவைத்து பாதி பாதியாக கட் பண்ணியது) - 2

போண்டா மாவுக்கு:

கடலை மாவு - 3/4 கப்

சோடா மாவு - 1 1/2 தேக்கரண்டி

பச்சரிசி மாவு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 4 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பஜ்ஜி மாவுக்கு கொடுத்துள்ளவைகளை எல்லாம் ஒன்றாகத் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

பஜ்ஜி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

இப்பொழுது முட்டையை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: