முட்டை பஜ்ஜி (2)
தேவையான பொருட்கள்:
முட்டைகள் - 8
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
பச்சைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
புதினா இலை (பொடிதாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பற்கள்
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டைகளை வேக வைத்து எடுத்து மேல் ஓட்டினை நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
அவற்றின் மஞ்சள் கருக்களை கவனமாக, வெள்ளைக் கரு உடையாமல் எடுத்து பொடியாக நறுக்கவும்.
பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், அரைத்த விழுதுகள், கொத்தமல்லி இலை அனைத்தும் தேவையான உப்புடன் கலந்து மறுபடியும் ஒரு தேக்கரண்டி உதவியால் வெள்ளைக்கருக்களின் குழிகளில் நிரப்பவும்.
சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு இவை மூன்றையும் நன்கு அரைத்து கடலைமாவு, மிளகாய்த்தூள், புதினா இலை அனைத்துடனுடனும் தேவையான உப்பு சேர்த்து கலந்து கெட்டியான கரைசலைத் தயாரிக்கவும்.
எண்ணெயை சூடாக்கி தயாரித்து வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக கரைசலில் கவனமாக அமிழ்த்தி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து பொரித்து எடுத்து பரிமாறவும்.