முட்டை பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவையும், அரிசி மாவையும், உப்பையும் ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.
முட்டையை நன்றாக வேகவைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டி வைக்கவும்
முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து உடைத்து அதில் தேங்காய், இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு கலந்து முட்டையின் வெள்ளை கருவில் மீண்டும் வைக்கவும்.
எண்ணெயை காயவைத்து கொள்ளவும். முட்டையை மேலே கலந்து வைத்துள்ள கடலை மாவில் கவனமாக முக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.