முட்டை சமோசா
0
தேவையான பொருட்கள்:
சமோசா ஷீட் (feuille de brick) - 20
வெங்காயம் - 1 நறுக்கியது
காப்சிகம் - 1/4 துண்டு
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1/2 தேக்கரண்டி
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 1 தேக்கரண்டி
சூரியகாந்தி எண்ணை - 2 கப்
செய்முறை:
முதலில் தேங்காய் எண்ணையில் குடைமிளகாயை வதக்கவும்..அதன் பின் அதில் வெங்காயத்தையும்,பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் அதிகம் வதங்க தேவையில்லை.பின்பு அதில் முட்டை மூன்றை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து ரொம்பவும் வரண்டு போகாமல் சிறிது ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு 1 நிமிடம் வதக்கவும்
பின்பு தீயை அணைத்து விட்டு குளிற விடவும்
அதன் பின் சமோசா ஷீட்களில் வைத்து சுருட்டி எண்ணையில் பொரித்தெடுத்து பரிமாறவும்