முட்டைப் பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 3

கேரட் - 2

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு

முட்டை - 2

இட்லி மாவு - 1 கப்

கோதுமை மாவு - 2 கரண்டி

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் கேரட்டை (தோல் சீவி) பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கி, கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக்கி சேர்க்கவும்.

முட்டைகளை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக நுரைவரும் அளவிற்கு அடித்துக் கொள்ளவும்.

கேரட் கலவையுடன் இட்லி மாவு, கோதுமை மாவு, அடித்த முட்டை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள மாவை பணியாரக்கல்லில் ஊற்றி வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும், பனியாரக்குச்சியால் திருப்பி மறுபக்கத்தையும் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: