முட்டைக்கோஸ் வடை (2)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 1 கப்
கடலை மாவு - 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 20
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம்பருப்பினை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் கடலை மாவு, பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை நன்கு கழுவி, பொடிப்பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள மாவில் போடவும்.
முந்திரிப்பருப்பையும், கொத்தமல்லித்தழையையும் சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது டால்டா விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாக தட்டிப் போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.