முட்டைகோஸ் வடை (3)
0
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
பொடியாக வெட்டிய முட்டைகோஸ் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பில்லை - 4 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பினை 2 -3 மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீர் வடித்து வடைக்கு அரைப்பது போல கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியினை பொடியாக வெட்டி வைக்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்துள்ள உளுத்தம்மாவுடன் முட்டைகோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.