முட்டைகோஸ் வடை

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் - 1/4 கிலோ

புழுங்கல் அரிசி - 1/4 படி

உருட்டு உளுந்து - 1/4 படி

சோம்பு - 3 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லிதழை - விருப்பம் போல்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், உளுந்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரிசியுடன் சோம்பு, உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்து உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், மல்லித்தழை இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

அரைத்த வடை மாவில் முட்டைகோஸ், வெங்காயம், மல்லிதழை, கறிவேப்பிலை, மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு உருண்டை எடுத்து வடையாக தட்டி போட்டு திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த வடைக்கு மாவு கெட்டியாக அரைக்கனும், ஏன் என்றால் கோஸ் சேர்த்ததும் தண்ணீர் விடும்,.

விருப்பப்பட்டால் மிளகாய் தூளுக்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.