மீன் போண்டா
தேவையான பொருட்கள்:
முள் இல்லாத மீன் துண்டு - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு (பெரியது) - 1
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு - 1 மேசைக்கரண்டி
முட்டை - 2
நல்லமிளகு (ஒன்றிரண்டாக உடைத்தது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 1/2 கோப்பை
எலுமிச்சைப்பழம் - 1/2 மூடி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
மீனையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் குறைவான தண்ணீர் வைத்து அது நன்றாக கொதிக்கும் வேளையில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அதில் மீனை போட்டு வேகவைக்கவும்.
மீன் வெந்ததும் மீனின் தோலுரித்து அதையும் மசித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடாக்கி அதில் கடலைமாவு, கார்ன் ஃப்ளார் மாவு இரண்டையும் போட்டு நன்றாக கட்டித்தட்டாமல் கலக்கவும்.
அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மசித்த மீன், தேவையான அளவு உப்பு, நல்லமிளகுத்தூள், முட்டை உடைத்து ஊற்றி கொத்தமல்லித்தழையும் சேர்த்து நன்றாக கட்டியாக ஒரு கரண்டியின் உதவியாலே கலக்கி வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் சேர்த்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து அதில் தேவையான எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மீன் கலவையில் ஒரு கரண்டி எடுத்து எண்ணெயில் போட்டு நன்றாக சிவக்க பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.