மிளகு வடை (3)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 200 கிராம்

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

டால்டா - 2 தேக்கரண்டி

அரிசிமாவு - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறுதுண்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து நீரைச் சுத்தமாக வடித்து விட்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து நீரே விடாமல் கெட்டியாக அரைக்கவும்.

சற்று நறநறவென்று அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகத்தைப் பொடியாக்கிக் கொள்ளவும். வடை மாவில் மிளகு, சீரகம் பொடி, டால்டா, அரிசிமாவு சேர்த்து நன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு சற்று காய விடவும்.

எண்ணெய் காயும் பொழுது, சுத்தமான ஈரத்துணியில் மாவில் சிறிதளவு வைத்து மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு நன்கு கரகரப்பாக வெந்து சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: