மிளகு வடை (2)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மிளகுப்பொடி - 2 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
அதை கெட்டியாக கொரகொரப்பாகவும் அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் மிளகுப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதை சிறிய எலுமிச்சை அளவு கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.