மிளகு வடை (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.
அத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து ஒரு திருப்பு திருப்பி வழித்து விட அதில் அரிசி மாவு கலந்து வடைகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்.