மிளகு வடை
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
மிளகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை 45 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கிரைண்டரில் உளுந்தை போட்டு நைசாக அரைத்து முக்கால் அளவு அரைத்தவுடன் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். மாவு அரைப்பட்டவுடன் அதில் உப்பை சேர்த்து அரைத்து முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மாவுடன் கறிவேப்பிலை, புதினா போட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து கையில் வைத்து தட்டி நடுவில் ஓட்டையிட்டு எண்ணெயில் போடவும்.
இருப்பக்கமும் வேகவிட்டு பொன்னிறமாக வந்ததும் வடைகளை எடுக்கவும்.
சுவையான மிளகு வடை தயார்.