மிளகாய் பஜ்ஜி
0
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மிளகாய் - 10
கடலை மாவு - 1 கப்
புட் கலர் ஆரஞ்ச் - சிறிதளவு
சோடா உப்பு - ஒரு பின்ச்
ஸ்டப்பிங் செய்ய:
நிலக்கடலை - 1 கப்
பூண்டு - 1
வர மிளகாய் - 5
உப்பு - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
நிலக்கடலையை வறுத்து தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்.
மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்கவும்.
மிளகாயை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்துக் எடுக்கவும்.