மினி சமோசா

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 2

மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாவில் உப்பு சேர்த்து பிசையவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி

எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி இறக்கவும்.

மாவை எலுமிச்சை அளவு உருட்டி சப்பாத்தி கட்டையில் லேசாக தேய்த்து வைக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி சிறு தீயில் தேய்த்தவற்றை போட்டு (தண்ணீர் வற்றும் வரை) எல்லாவற்றையும் போட்டு எடுத்துக்கொள்ளவும்.

நான்காக கட் பண்ணி முக்கோணமாக மடித்து வெங்காய கலவையை உள்ளே வைத்து மடித்து மூடவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து சமோசக்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: