மாசி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாசி - 50 கிராம்

தேங்காய் - 1 மூடி

கீரைப்பொடி - 1 மேசைக்கரண்டி

சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி

அரைத்த சாதம் - 1 1/2 மேசைக்கரண்டி

முட்டை - 1

மசாலா தூள் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாசியை பொடி செய்துக்கொள்ளவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

பின் பொடித்த மாசியில் தேங்காய் துருவல்,அரைத்த சாதம், சீரகத்தூள், உப்பு, மசாலா தூள் ,பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) போட்டு கீரைப்பொடி,முட்டை சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் தட்டி எண்ணெய்யை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: