மஷ்ரூம் மின்ட் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டன் அல்லது ஷிட்டாக்கி மஷ்ரூம்- 10

புதினா இலைகள் - 1/2 கப்

கறிவேப்பிலை- 2 இனுக்கு

பச்சை மிளகாய் (காரத்துக்கு ஏற்ப) - 4

கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

அரிசி மாவு - 1 1/2 மேசைக்கரண்டி

வெண்ணெய் (விருப்பப் பட்டால்) - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மஷ்ரூமை சுத்தம் செய்து மிக மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டவும்.

புதினா மற்றும் கறிவேப்பிலையை கையால் ஒன்றிரண்டாக பிய்த்து வைக்கவும்.

பச்சை மிளகாயை பொடியாக வெட்டவும்.

எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கலந்து கையால் அழுத்தி பிசிறி விடவும்.

வெண்ணெய் சேர்க்கவில்லை என்றால் ஒரு மேசைக்கரண்டி சூடான எண்ணெய் விட்டு பிசையவும். இப்போது மிகக் கொஞ்சமாக நீர் தெளித்து பிசிறவும்.

சூடான எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்து விடவும். பொன்னிறமானதும் எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: