மஷ்ரூம் பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/2 அல்லது 1 தேக்கரண்டி
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1/2 அல்லது 1 தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய், சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் மஷ்ரூம் கலவையை உதிர்த்துப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுத்து பரிமாறவும்.