மல்லி சாட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்

நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்

சோடா மாவு - ஒரு சிட்டிகை

வெல்லம் - 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். வெல்லத்தை துருவி சிறிது நீரில் கரைத்து வடிகட்டவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தில் அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.

பின் தேவையான நீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்த இட்லியை எடுத்து தனியாக வைக்கவும்.

இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கி எடுத்து கடாயில் எண்ணெய் சூடானதும் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

மேலே சிறிது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சுவையான மல்லி சாட் தயார்.

குறிப்புகள்:

இனிப்பு, காரம் கலந்த சுவையான சுலபமாக செய்ய கூடிய சாட் இது. உள்ளே சாஃப்டாகவும் வெளியே க்ரிஸ்பியாகவும் இருக்கும்.

உங்கள் காரத்துக்கு ஏற்றபடி மிளகாய் சேர்க்கலாம்.

ஒரு கத்தியை உள்ளே விட்டு எடுத்தால் ஒட்டாமல் வந்தால் இட்லி வெந்துவிட்டது என்று அர்த்தம்.

இதில் கொத்தமல்லிக்கு பதிலாக புதினா, கீரை வகை கூட பயன்படுத்தலாம்.