மல்டி புரொட்டீன் க்ரீன் வடை
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு (க்ரீன்) - 1/2 கப்
பச்சைபட்டாணி - 1/2 கப்
சன்னா - 1/4 கப்
சுண்டல்கடலை - 1/4 கப்
காராமணி - 1/4 கப்
ராஜ்மா - 1/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறுத்துண்டு
பூண்டு - 2 பல்
பச்சைமிளகாய் (காரத்திற்கேற்ப) - 3
வெங்காயம் - 2
காரட் துருவல் - 1/4 கப்
கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - ஒரு கைப்பிடி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லாப் பருப்புகளையும் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதனுடன் சீரகம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நீர் விடாமல் சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் வெங்காயம், காரட் துருவல், மல்லித்தழை சேர்த்து வடையாக தட்டி வாணலியில் சூடாக்கிய எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.