மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மரவள்ளியை தோலுரித்து சுத்தம் செய்து நடுவில் உள்ள வேரினை விட்டு, தகடு போல் மெல்லிதாக வெட்டி கொள்ளவும்.
பின்பு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி என்பவற்றை சேர்த்து பிரட்டி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து அளவான தீயில் எண்ணெயை ஊற்றி கொதிக்க விடவும்.
எண்ணெய் கொதித்தவுடன் மரவள்ளியை போட்டு நன்றாக முறுக விட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
இதனை சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.