மரவள்ளிக்கிழங்கு வடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

வெள்ளை உருட்டு உளுந்து - 50 கிராம்

கொத்தமல்லி தழை - ஒரு கொத்து

மிளகு - 10

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - ஒன்று

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணிநேரம் ஊற வைக்கவும். முதலில் கிரைண்டரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை போட்டு 5 நிமிடம் அரைக்கவும். பிறகு அதனுடன் துருவிய கிழங்கை போட்டு 10 நிமிடம் நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதன்பிறகு நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, உப்பு இவற்றை மாவுடன் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்து விட்டு, நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பிசையும் போது வெங்காயத்தை நன்கு கைகளால் நசுக்கி விட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்து, வடையாக தட்டி எண்ணெய்யில் போடவும்.

3 நிமிடம் கழித்து வடையை திருப்பி போட்டு, 2 நிமிடம் கழித்து சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: