மரவள்ளிக்கிழங்கு வடை (1)
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
இட்லி மாவு - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
இஞ்சி - சிறிது
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற விடவும். மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்புடன் சோம்பு, துருவிய கிழங்கு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, இட்லி மாவு, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து நன்கு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடையாக தட்டி பொன்னிறமாக பொரித்து பொரித்து எடுத்து பரிமாறவும்.