மரவள்ளிக்கிழங்கு போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 10

மைதாமா - 200 கிராம்

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை சிறு சிறு துண்டாக வெட்டி தோல் நீக்கி கழுவி, அவிக்கவும்.

பின் அதனுள் இருக்கும் வேரை நீக்கி மசித்து வைக்க வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பெருஞ்சீரகம், பச்சை மிளகாயை, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மரவள்ளிக்கிழங்கைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.

மைதாமாவுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும்.

மரவள்ளிக்கிழங்குக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: